Thursday, June 3, 2010

Happy birthday to you sir!!!

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பற்றி...
முழுப்பெயர் ஸ்ரீபதி பண்டித ரதயுல பாலசுப்பிரமணியம்
பிறந்த தேதி ஜீன் 4, 1946
பிறந்த இடம் கொணேட்டாம் பேட்டை (எம்.ஜி.ஆர். மாவட்டம்)
குடும்பம் மனைவி - சாவித்திரி, மகள் - பல்லவி, மகன் - சரண்
படிப்பு என்ஜினியர்
எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுபவர் பாலு என்ற பாலசுப்பிரமணியம். திரு எஸ்.பி.பி. அவர்கள் சிறந்த பாடகர், நடிகர், இசையமைப்பாளர், மனித நேயம் கொண்டவர் - பல மொழிகளில் பாடியவர்.
சாதனைகள் 40 ஆண்டுகளில் 36,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி உலக சாதனை புரிந்துள்ளார்.
12 மணி நேரத்தில் 17 பாடல்களை பாடியிருக்கிறார்.
26 வினாடிகளில் மூச்சுவிடாமல் பாடலின் சரணத்தை பாடியுள்ளார்.
6 முறை தேசிய விருது பெற்றுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் 55 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.

பாடிய மொழிகள் தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம், இந்தி, பெங்காளி, ஒரியா மற்றும் துளு.
திரைப்படத்தில் அறிமுகப்படுத்தியவர் திரு. கோதண்டபாணி
முதல் படம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மரியாத ராமண்ணா (1966 - தெலுங்கு)
கன்னடத்தில் முதல் படம் நகரே அதே சொர்க்கா (1966)
அறிமுகம் இசையமைப்பாளர் எம். ரங்காராவ்
தமிழில் முதல் படம் சாந்தி நிலையம் (1969)
அறிமுகம் இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்
மலையாளத்தில் முதல் படம் கடல் பாலம் (1970)
அறிமுகம் இசையமைப்பாளர் ஜி. தேவராஜன்
ஹிந்தியில் முதல் படம் ஏக் துஜே கேலியே (1980)
அறிமுகம் இசையமைப்பாளர் திரு. லட்சுமிகாந்த் பியாரேலால்
தேசிய விருது :
சிறந்த பின்னணி பாடகர் 1. 1979 - சங்கராபரணம்
2. 1981 - ஏக் துஜே கே லியே

3. 1983 - சாகர சங்கமம்

4. 1989 - ருத்ர வீணா

5. 1995 - கானசாகர கானயோகி பஞ்சாக்ஷ்ராகவாய்

6. 1996 - மின்சார கனவு

மாநில விருதுகள் 1981- தமிழக அரசின் கலைமாமணி விருது
12 முறை ஆந்திர அரசின் விருது

4 முறை தமிழக அரசு விருது

22 முறை சினிமா ரசிகர் மன்ற விருது

இவர் இசை நிகழ்ச்சி நடத்திய நாடுகள் சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, மலேசியா, U.A.E. U.K. ஜெர்மன், சுவிட்சர்லாந்து, ஃப்ராண்ஸ், கனடா, அமெரிக்கா, நார்வே மற்றும் பல நாடுகள். பாடகராக மட்டுமின்றி, பிரபல நடிகர்களுக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார் (கமலஹாசன், ரஜினி காந்த், டி. ராஜேந்தர், விசு)
நடிகராக... இசை துறையில் தன் கொடியைப் பறக்கவிட்ட எஸ்.பி.பி. திரையில் நடிகராகி தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் 68 படங்கள் நடித்துள்ளார். இவருடைய நடிப்பிற்கு இசையில் இருப்பது போலவே மிகவும் நல்ல பெயர்.
S.P.B. சமூக சேவையில் நிறைய நாட்டம் உண்டு. சென்னை தெலுங்கு அகாடமியில் உதவித் தலைவர். எவ்வளவோ நல்லக் காரியங்களுக்கு தன் இசை நிகழ்ச்சியின் மூலம், பணம் வசூல் செய்துக் கொடுத்த பெருமை இவருக்கு உண்டு. தந்தையின் பெயரில் ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து நலிவுற்றோருக்கு உதவி வருகிறார்.

S.P.B. தன்னுடைய முன்னோடியாக கருதும் -
திரு. கண்டசாலாவிற்கு, 1990 ஆண்டு, ஹைதராபாத்தில் சிலை ஒன்றை திறந்து வைத்தார்.

நவீன கருவிகளை நிறுவி எஸ்.பி.பி. ரிக்கார்டிங் தியேட்டர்கட்டி, அதற்கு தன் சினிமாவுலக குருவான கோதண்டபாணியின் பெயரைச் சூட்டியுள்ளார்.

பெரியவர்களிடம் இவர் காட்டும் மரியாதை, பணிவு, தொழிலில் இவருக்கு உள்ள பக்தி, எஸ்.பி.பி. யை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது.

1 comment:

ஷர்புதீன் said...

yes, he is one of my lovable guy and i love him verymuch