எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஸ்ரீதேவி மிகவும் அழகாக இருப்பார் இந்த பாடலில்.
""வெட்டி எடுக்காத தங்கமோ
கொட்டி கொடுக்கின்ற வைரமோ""
இந்த பாட்டுல தலைவரோட வாய்ஸ் கேளுங்க.. அப்படியே இளமை ததும்பும் குரல்ல பாடியிருப்பார். என்ன இவளவு சீக்கிரமா பாட்டு முடிஞ்சுருசென்னு வருத்தமா இருக்கும். கேளுங்க!!!
படம்: போக்கிரி ராஜா
உயிர்: எம்.எஸ்.விஸ்வநாதன்
உடல்: கண்ணதாசன்
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி.
விடிய விடிய சொல்லித்தருவேன்
பொன் மாலை நிலாவின் வேதங்கள்
என் மார்ப்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னனென்னவோ என் எண்ணங்கள்
(விடிய விடிய சொல்லித்தருவேன்...)
மாலையில் மல்லிகை அந்தியில் பஞ்சனை
மாலையில் மல்லிகை அந்தியில் பஞ்சனை
ஊரெல்லாம் பாக்குதே உன்னிடம் கேட்கிறேன்
ஊரெல்லாம் பாக்குதே உன்னிடம் கேட்கிறேன்
சொல்லித்தர நானிருக்கேன் ராஜ்ஜாத்தியே
(விடிய விடிய சொல்லித்தருவேன்...)
வெட்டி எடுக்காத தங்கமோ
கொட்டி கொடுக்கின்ற வைரமோ
கல்லில் வடிக்காத சிற்பமோ
கண்ணில் அடங்காதா பெண்மையோ
சொல்லித்தர நானிருக்கேன் ராஜ்ஜாத்தியே
(விடிய விடிய சொல்லித்தருவேன்...)
பேசினால் மந்திரம் பூசினால் சந்தனம்
மார்ப்பில் குங்குமம் காரணம் சங்கமம்
ஆரம்பம் தாய்மொழி அடுத்ததோ புதுமொழி
சொல்லித்தர நானிருக்கேன் ராஜ்ஜாத்தியே
(விடிய விடிய சொல்லித்தருவேன்...)
No comments:
Post a Comment