Wednesday, July 21, 2010
Then sindhuthe vaanam
படம்: பொண்ணுக்குத் தங்க மனசு.
உயிர்: ஜி.கே. வெங்கடேஷ்.
உடல்: கவியரசு கண்ணதாசன்.
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜானகி.
தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க
பன்னீரில் ஆடும் செவ்வாடை கால்கள்
பனி மேடை போடும் பால் வண்ண மேனி
பனி மேடை போடும் பால் வண்ண மேனி
கொண்டாடுதே சுகம் சுகம் பருவங்கள் வாழ்க
தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க
வைதேகி முன்னே ரகுவம்ச ராமன்
விளையாட வந்தால் வேறேன்ன வேண்டும்
விளையாட வந்தால் வேறேன்ன வேண்டும்
சொர்க்கங்களே வரும் தரும் சொந்தங்கள் வாழ்க
தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே
கண்ணோடு கண்கள் கவிபாட வேண்டும்
கையோடு கைகள் உறவாட வேண்டும்
கன்னங்களின் இதம் பதம் காலங்கள் வாழ்க
தேன் சிந்துதே வானம் உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க
இசையில் நனைவோம்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment